பாட்னா:

ந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 31ந்தேதி வரை அரசு பேருந்துகள் ஓடாது என்றும்,  மால்கள், ஓட்டல்கள் மூடவும் மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வீரியத்தை காட்டி வருகிறது.  இந்தியாவில்  அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது.

இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,  பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க இன்று நாடு முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9மணி வரை மக்கள் ஊரடங்குஅமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில்,    கொரோனா வைரசை கட்டுப்படுத்த பீகார் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி மார்ச் 31ம் தேதி வரை பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்துகளும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மாநிலத்தில் உள்ள அனைத்து உணவகங்களும், மால்கள் உள்பட மக்கள் கூடும் பிரபலமான கடைகள்  அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இது பீகார் மாநில  பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.