சீனா:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வந்த மருத்துவமனை 8 நாட்களில் முடிக்கப்பட்டு, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

உயிரிக்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவி வரும் வகையில், நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க,  2 சிறப்பு மருத்துமனையை அசுர வேகத்தில் கட்டி முடிக்க அந்நாடு ராணுவம் திட்டமிட்டது.

முதல் கட்டமாக ஆயிரம் படுக்கை வசதிகளை கொண்டதாக உருவாக்கப்படும் இந்த மருத்துவமனை, 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் தயாராகி வந்தது.   இதற்காக 10 புல்டோசர்கள் மற்றும் 35 குழி தோண்டும் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மருத்துவமனையை ஆறு நாட்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், 8 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு, ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு சார்ஸ் நோய் தாக்குதலின்போது பெய்ஜிங்கில் கட்டப்பட்ட சியாடோங்சன் (Xiaotangshan) மருத்துவமனையை மாதிரியாக கொண்டு இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த புதிய மருத்துவமனை இன்று  முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படு கிறது. இந்த மருத்துவமனையில், சீன  ராணுவத்தைச் சேர்ந்த 1400 மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை கட்டிடம் கட்டப்படும் வீடியோ….