ரடங்கை திடீரென தளர்த்தினால் கொரோனா மீண்டும் தாக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கை ஒரேயடியாக விலக்குவது கொரோனா வைரஸின் மறுதாக்குதலுக்கு வழிவகுக்கும் என, உலக சுகாதார அமைப்பு  தெரிவித்து உள்ளது.

epa06747281 Tedros Adhanom Ghebreyesus, director general of the World Health Organization (WHO), attends a press conference at the European headquarters of the United Nations in Geneva, Switzerland, 18 May 2018. The WHO Director-General answered questions ahead of the World Health Assembly and following the meeting of an International Health Regulations Emergency Committee on Ebola in the Democratic Republic of the Congo. EPA-EFE/VALENTIN FLAURAUD

சீனாவில் இருந்து பரவிய கொரோனா இன்று 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியாஉள்பட பல நாடுகள்  ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கின்றன. இதனால் அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில்  ஊரடங்கு உத்தரவு வரும் 14ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், தற்போது தான் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பல மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை  நடத்தவிருக்கிறார்.

இந்த நிலையில், ஊரடங்கை விரைவாக தளர்த்துவது வைரஸின் மறு எழுச்சிக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

”ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள சில நாடுகள் ஏற்கனவே மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என விதித்துள்ள கட்டுபாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. அனைவரையும் போல உலக சுகாதார அமைப்பும் பல நாடுகள் விதித்துள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என விரும்புகிறது.

அதே நேரம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மிகவும் விரைவாக தளர்த்துவது வைரஸின் பயங்கர மறு தாக்குதலுக்கு வழி வகுக்கும். இந்த நிலைமையை திறம்பட நிர்வகிக்கத்தவறினால் மாறுபாடான எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என  எச்சரித்து உள்ளார்.