பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது, 34,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஒரே  நாளில் மட்டும் 86 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த இறப்புகளில் பெரும்பாலானவை மிகவும் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்திலிருந்து பதிவானதாகும்.

34,546பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. சீன நகரப்பகுதியில் மட்டும் 86 பேர் பலியாகி இருக்கின்றனர்.

31 மாகாணங்களில் 3,399 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில், 81 பேர் ஹூபே மாகாண தலைநகரான வுஹானில் இருந்து பதிவாகி உள்ளது. ஹாங்காங்கில் 26, மக்காவோ 10, தைவான் 16 என இறப்புகள் பதிவாகி இருக்கின்றன.

மொத்தம் 4,214 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. 1,280 நோயாளிகள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு உள்ளனர், மேலும் 510 பேர் குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

பிப். 7 ம் தேதி 3.45 லட்சம்  பேருக்க கொரோனா பாதிப்பு  கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 26,702 பேர் மருத்துவ கண்காணிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் 1.89 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 220 ஆக உயர்ந்தது. ஜப்பான் 86 ஆகவும், சிங்கப்பூரில் 33 ஆகவும் பதிவாகியுள்ளது. கேரளாவில் மூன்று பேருக்கு பாதிப்பு இருக்கிறது. வுஹானில் இருந்து வெளியேற்றப்பட்ட 647 இந்தியர்கள் மானேசரில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.