தாய்லாந்து:

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு தாய்லாந்தில் பூங்காக்களில் தவித்தவர்களுக்கு உதவ யானைகள் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சையாங் மோய் யானைகள் முகாமில், யானை சவாரியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்வதை தொழிலாக செய்பவர்களின் தொழில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த முகாம் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து 78 யானைகள் பணியை துவக்கவிருந்த போதும், பெரியளவில் இந்த தொழிலை செய்ய முகாம் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு பதிலாக, விலங்குகள் முகாம் மைதானத்தில் சுதந்திரமாக சுற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள், வன பகுதிகளில் தங்கியிருந்து வன விலங்குகளை பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 44 ஆண்டுகளில் இது முதல் முறையாக தற்போது யானைகள் சவாரி எதுவும் நடத்தப்படவில்லை என்று முகாம் இயக்குனர் அஞ்சலீ கலம்பிச்சிட் தெரிவித்துள்ளார்.

கடந்த 1976-ஆம் ஆண்டில் இந்த தொழிலை தொடங்கியதில் இருந்து, யானை சவாரி சுற்றுலா பயணிகளிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆனால் கொரோனா வைரஸ் பரவியதால் குறைவான சுற்றுலாப் பயணிகளே இங்கே வந்துள்ளனர். இறுதியில் அரசாங்கம் எங்களை மூட உத்தரவிட்டது. இதனால், யானைகளை விடுத்துள்ளோம் என்றார்.

இப்போதைக்கு அனைத்து வணிகங்களும் இடைநிறுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வருமானம் ஏதும் இல்லாத நிலையில், முகாம்களின் உரிமையாளர்கள் யானைகளை பராமரிப்பதற்கான மாதாந்திர செலவை வழங்க வேண்டும். இதுமட்டுமின்றி 300 ஊழியர்களுக்கு தொடர்ந்து பணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஐந்து மில்லியன் பாட் (140,000) செலவிட்டு வருவதாக கலாம்பிச்சிட் கூறினார்.

தொழில் இல்லாவிட்டாலும், எங்கள் ஊழியர்களை அனாதையாக விட நாங்கள் விரும்பவில்லை. இதனால், செல்வுகளை குறைக்க காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.