கேரளாவில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்:

கேரளாவில் 5 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 97 நாடுகளுக்கு பரவியியுள்ளது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 80 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 55 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரம் பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 97 நாடுகளுக்கு பரவியியுள்ளது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 80 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 55 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரம் பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சீனாவில் 80 ஆயிரம் பேருக்கும், பிற நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவுக்கு அடுத்தப்படியாக தென் கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா.
தென் கொரியாவில் 7,041 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 44 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 4,747 பேருக்கு வைரஸ் தொற்று உள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 5,636 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 233 பேர் வைரஸுக்கு பலியாகியுள்ளனர்.

ஏழை நாடு, பணக்கார நாடு என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல், 90-க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவில் 213 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. செர்பியா, வாடிகன், ஸ்லோவோக்கியா, பெரு, டோகோ, பூடான் நாடுகளில் முதன் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் கலிபோர்னியா கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கிராண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் உள்ள 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பலில் மூவாயிரம் பேர் இருக்கும் நிலையில், அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படுவதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து கேரளம் திரும்பிய 3பேர் உட்பட பத்தினம் திட்டாவை சேர்ந்த 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் ஏற்கெனவே 3 பேருக்கு கரோனா உள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

இத்துடன் சேர்த்து நாட்டில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தற்போது 39-ஆக உள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், கேரளத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.  கொரோனா பாதிப்புள்ள 5 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.