கொரோனா எதிரொலி: சிறப்பு தனிமைப்படுத்தல் விடுமுறையை அறிவித்தது ஏர் இந்தியா

புதுடெல்லி:
ந்திய விமான சேவை ஒரு புதுவித முயற்சி எடுத்துள்ளது. இது போன்ற ஒரு முயற்சியை இந்திய விமான சேவை எடுப்பது இதுவே முதல் முறை ஆகும். தங்களுடைய பணியாளர்களுக்கு சிறப்பு தனிமைப்படுத்தபட்ட விடுப்பு அளிக்க போவதாக தற்போது இந்திய விமான சேவை அறிவித்துள்ளது.

தங்களுடைய பணியாளர் எவரேனும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மனிதருடனோ அல்லது கொரோனா அதிகம் உள்ள இடத்திலோ இருந்தால் அவர்கள் உடனடியாக தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக அவர்களுக்கு 14 நாட்கள் விடுப்பு அளிக்கப்படும் என்றும் இந்திய விமான சேவை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிக்கொண்டு வரும் இந்த சூழ்நிலையில், யரிடம் இருந்து தொற்று பரவியது என்றே தெரியாத நிலை வரும்போதும், கொரோனா உறுதிசெய்யப்படும் பணியாளர்களும் உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுப்பபடுவர் என்றும், முக்கியமாக இந்த விடுப்பு சிறப்பு விடுப்பாகவே இருக்கும் என்றும் இதற்காக சம்பளத்தை பிடிக்க மாட்டார்கள் என்றும், இதுபோல் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த விடுப்பு மிகவும் உதவியாக இருக்கும், இதனை மற்ற விமான சேவை நிறுவனங்களும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும் என்றும் மூத்த விமான ஓட்டி ஒருவர் கூறியுள்ளார்.

இந்திய விமான சேவையில் பல பணியாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவதால் இது அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.