புதுச்சேரியில் தீவிரமாகும் கொரோனா, ஒரேநாளில் 345 பேருக்கு தொற்று உறுதி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மெர்த்த எண்ணிக்கை  10,859ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை  6,942 பேர் குணமடைந்துள்ள நிலையில் 164 பேர் உயிரிழந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.