பீஜீங்:

கோரோனா வைரஸ் அமெரிக்காவில், அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் தங்களது நாட்டவர்களை சீனாவில் இருந்து வெளியேற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்தியாவும் நமது நாட்டினரை அங்கிருந்து வெளியேற்ற  ஏர்இந்தியா விமானங்கள் தயார் நிலையில் வைத்துள்ளது.

உயிரிக்கொல்லி வைரஸான கோரோனா வைரஸ் எனப்படும் ஒளிவட்ட வைரஸ் தாக்குதலுக்கு பலியான சீனர்களின் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ள நிலையில் சுமார் 6ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின்  வுகான் மற்றும் பல மாநிலங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும்,  30 நகரங்களும் துண்டிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டு உள்ளனர்.

ஹாங்காங், தாய்லாந்தில் தலா 8 பேர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் தலா 5 பேர், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பானில் தலா 4 பேர், பிரான்ஸ், தைவானில் தலா 3 பேர், கனடா, வியட்நாமில் தலா 2 பேர், நேபாளம், ஜெர்மனியில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 15 நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனம், உலக நாடுகளும், கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், சீனாவில் சிக்கி உள்ள வெளிநாட்டவர்களை திருப்பி அழைக்கும் முயற்சியில் இந்தியா உள்பட பல நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகள் தங்கள் நாட்டினை அழைத்து வர மும்முரம் காட்டி வருகின்றன.