திருவனந்தபுரம்:

சீனாவில் இருந்து பரவிய கொரோனா இந்தியாவிலும் கால்பதித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 14 பேர் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த வெளி நாடுகளுக்கு சென்று வந்தவர்கள், அதை மறைத்தால், அது குற்றமாக கருதப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில், மொத்தம் ஆயிரத்து 116 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 149 பேர் ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளிலும், மற்ற 967 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத் தப்பட்டு உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய  3 வயது குழந்தையின் தாய், தந்தைக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  சுகாதாரத்துறை மந்திரி சைலஜா, கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்பது குற்றமாக கருதப்படும் என்றும், பயண விவரங்களை மறைப்பது குற்றமாக கருதப்படும் என்று  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளுக்கோ அல்லது நாடுகளுக்கோ சென்று திரும்பியவர்கள் அந்தத் தகவலை சுகாதாரத்துறையிடன் முறையாக தெரிவிக்க வேண்டும்.  ஒருவேளை பயணம் மேற்கொண்டதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பிறருக்கும் பரவக்கூடும். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் அடையாளத்தை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வெளிப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 61 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்து ம் நோக்கில் கேரள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளிநாடு சென்று வந்தவர்கள், அதை மறைத்தால் குற்றம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனும் தெரிவித்து உள்ளார்.