லண்டன்: பிரிட்டன் இளவரசர், பிரதமரை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனில் மட்டும் பொது மக்களை மட்டுமின்றி முக்கிய அரசியல் பிரமுகர்களையும் தாக்கி வருகிறது.

2 நாட்களுக்கு முன்னர் பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந் நிலையில் இன்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவரும் தனிமைப்படுத்தப்பட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில் பிரிட்டன் இளவரசர், பிரதமரை அடுத்து, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கின் ரத்த பரிசோதனை முடிவில் இது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். முன்னதாக, மருத்துவர் ஹபீப் ஜைதி கொரோனா வைரசால் உயிரிழந்தார்.

கொரோனா தாக்கிய 24 மணி நேரத்தில் அவர் பலியாகி இருக்கிறார். இறக்கும் தருவாயில் அவர் மகளும், மருத்துவருமான சாரா ஜைதியிடம் ஒரு புத்தகத்தை தந்து இருக்கிறார். கொரோனா வைரஸ் பற்றிய புத்தகம் ஆகும். இங்கிலாந்தில் கொரோனா வைரசால் இறந்து முதல் மருத்துவர் ஹபீப் ஜைதி என்பது குறிப்பிடத்தக்கது.