கொரோனா வைரஸ் பாதிப்பால் வீட்டிலேயே ஒர்க்அவுட் செய்யும் கத்ரீனா கைஃப்….!

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று (மார்ச் 17) காலை மூன்றாக உயர்ந்த நிலையில், நோய் தொற்றியவர்கள் எண்ணிக்கை 126ல் இருந்து 137 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் வீடுகளிலேயே இருக்குமாறு மக்களை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

பாலிவுட் பிரபலங்களில் பெரும்பாலானோருக்கு தினமும் ஜிம்மிற்கு செல்லும் பழக்கம் உள்ளது. கொரோனாவால் வீட்டிலேயே இருப்பதால் அவர்களால் ஜிம்மிற்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் வீட்டிலேயே எப்படி ஒர்க்அவுட் செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது என்று பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.