திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் செல்ல கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் எதிரொலியாக, கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. அதை முன்னிட்டு முதலமைச்சர் பினராயி விஜயன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகயாக சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
அவர் கூறியதாவது: நாளை முதல் சபரிமலை அய்யப்பன் கோயில் மீண்டும் திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை வைத்திக்க வேண்டும் என்பது அவசியமாகும். ஒரு நாளைக்கு 250 பேருக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.