பிஜிங்:

சீனாவை வைட்டு கொரோனை வைரஸ் வெளியாகிவிட்ட நிலையில், நேற்று எந்தவொரு புதியதொரு பாதிப்பும் வுகானில்   பதிவாகவில்லை. இதை சீன மக்களும், மாநில நிர்வாகமும் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்…

வண்ண விளக்குகளால் கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டு, தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில்சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது, சீனாவை விட்டு வெளியேறி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

சீனாவில், 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 3248 பேரையும் பலிவாங்கியது. தற்போது அங்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு புதியதாக யாருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்படாத நிலையில், அதை சீனா கொண்டாடி வருகிறது.

கொரோனாவை நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட சீன மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் வகையில், அங்குள்ள பிரபலமான கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அதில்,   மருத்துவ ஊழியர்களுளை வாழ்த்தும்  முழக்கங்களும் பதிவிடப்பட்டிருந்தன.

நேற்று (வியாழக்கிழமை) , சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் 34 புதிய வழக்குகள் இருந்தபோதிலும், அவை அனைத்தும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடமிருந்து வந்தவை என்பதை உறுதிப்படுத்தியதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.