கொரோனா வைரஸ் பற்றிய தரவுகளை தர மறுக்கும் சீனா: உலக நாடுகள் குற்றச்சாட்டு

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பற்றிய தரவுகளை சீனா பகிர்ந்து கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரசால் உயிர்பலிகள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன. மற்ற நாடுகளில் இருந்து சீனா தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் உள்ள சீனர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். சுகாதார ரீதியாக பெரும் எச்சரிக்கை அனைத்து நாடுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில், கொரோனா வைரஸ் பற்றிய தரவுகளை சீன அரசு தர மறுப்பதாக அறிவியல் வல்லுநர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர். சுகாதார பாதுகாப்புக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் மூத்த அறிஞர் ஜெனிபர் நுஸோ கூறி இருப்பதாவது:

COVID-19 க்கு எதிராக மருந்துகளை உருவாக்க முயற்சிக்கும்போது, ​​சீனாவின் நிலைமை மோசமடைகிறதா அல்லது சிறப்பாக இருக்கிறதா என்பது குறித்த தகவல்களை மற்ற நாடுகள் தொடர்ந்து கேட்டு வருகின்றன. ஆனால், சீனாவோ அந்த தகவல்களை தருவது இல்லை.

புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை சீனா தினசரி வெளியிடுகிறது. ஆனால், அவர்கள் எப்போது நோய்வாய்ப் பட்டார்கள் என்ற தேதியை வெளியிட மறுக்கது.

இந்த தேதி விவரங்கள் மிக முக்கியமானது, ஏனெனில் அறிகுறி தொடங்கிய தேதி இல்லாமல், தொற்றுநோயியல் வல்லுநர்கள் ஒரு தொற்றுநோய் வளர்ந்து வருகிறதா அல்லது குறைந்து வருகிறதா என்று சொல்ல முடியாது.

எங்களுக்கு தகவல்கள் தரப்படவில்லை என்பதில் நாங்கள் கொஞ்சம் ஏமாற்றமடைகிறோம். சீனர்களிடமிருந்து வரும் வெளிப்படைத்தன்மை இல்லாததால் சற்று ஏமாற்றமடைகிறோம் என்று கூறினார்.

கார்ட்டூன் கேலரி