சென்னை : விமான சேவை பெருமளவு ரத்தானதால் வெறிச்சோடிய விமான நிலையம்

சென்னை :

சென்னை விமானநிலையத்தில் பல்வேறு வெளிநாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள அண்ணா சர்வதேச விமான முனையத்தில் ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடியது.

படம் : நன்றி சுனிதா சேகர்

சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், சில நாடுகளுக்கு தேவை அடிப்படையிலும் விமானங்கள் செல்கின்றன. எந்தெந்த விமான நிறுவனங்கள் சேவை வழங்குகின்றது என்பது இங்கே தரப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான சேவையில் பெரிய மாற்றம் ஏதும் தற்போது வரை இல்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதன் அடிப்படையில் அரசு எடுக்கும் நடவடிக்கை பொறுத்தே விமானங்கள் இயக்கப்படுவதால் இங்கே தரப்பட்டுள்ள விவரங்களை விமான நிறுவனங்களில் உறுதிப்படுத்தி கொண்டு தங்கள் பயணம் குறித்து திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயணிகளின் போக்குவரத்து குறைந்து, விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், சென்னை விமான நிலையத்தில் உள்ள சர்வதேச முனையம் இப்படித்தான் தெரிகிறது.