டெல்லி:

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியின்  பிறந்தநாள் விழாவில் பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டது தெரிய வந்த நிலையில், அந்த பள்ளிக்கூடம் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் படித்துவரும் மாணவரின் தந்தையின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் அவரின் குழந்தையுடன் படிக்கும் பள்ளித் தோழர்களும் கலந்து கொண்டனர்.

,இந்த நிலையில், தற்போது அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம், உடனே பள்ளியை  மூட உத்தரவிட்டது. இந்த தகவல் மாநில சுகாதாரத்துறை கவனத்துக்கு சென்றதைத் தொடர்ந்து, பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, அந்த பள்ளியில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட பள்ளிகளுக்கு சென்ற உ.பி. மருத்துவ அதிகாரிகள் அங்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.