கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிப்பு: 6 மாதங்களில் மனிதர்களுக்கு பயன்படுத்தலாம்

டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு தடுப்பூசி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் அமெரிக்க பயோடெக் நிறுவனமான கோடஜெனிக்ஸ் ஆகியவை கொரோனா வைரஸுக்கு (COVID-19) எதிராக தடுப்பு தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

இது மருத்துவத்திற்கு முந்தைய பரிசோதனைகளுக்கு தயாராக உள்ளது. 6 மாதங்களில் மனிதர்களுக்கு பரிசோதனைக்காக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதார் பூனவல்லா கூறுகையில், வழக்கமான முறைகள் மூலம் பயன்படுத்த ஒரு தடுப்பூசியை உருவாக்க ஏழு முதல் எட்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறினார்.

இந்த தடுப்பூசி செயற்கை ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரசை பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டது. உலகளவில் இதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போது, இது ஒரு முன்னேற்றமாகும்.