வீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

லண்டன்:
ங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு உலக நாடுகளைப்போல இங்கிலாந்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா விவகாரத்தில் இங்கிலாந்து தவறான திசையில் செல்வதாகவும், அங்கு அடுத்த மாதத்துக்குள் 50 ஆயிரம் புதிய பாதிப்பை பார்க்க முடியும் என நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா வைரசைத் தடுக்கும் முயற்சியில் இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார்’ என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன்,

கொரோனா எளிதாக இருக்கப் போவதில்லை என்பது நமக்கு நன்கு தெரியும். கொரோனா நாட்டில் பரவுவதை நாம் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களால் முயன்ற வரையில் வீட்டிலிருந்தே பணியைத் தொடருங்கள். பார்கள், உணவு விடுதிகள், பிற கடைகள் இரவு 10:00 மணிக்கு மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.