1000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு… அனைவரையும் சோதிக்க தமிழகஅரசு திட்டம்…

சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேலும் பரவுவதை தடுக்க அனைவருக்கும் சோதனை செய்ய மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (ஞாயிற்றுக் கிழமை) நிலவரப்படி கொரோனா பாதிப்பு  1,000 ஐத் தாண்டிய நிலையில், வைரஸுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டும் அனைவரையும், ம்  சோதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ள தாகவும், இதற்கு போதுமான ஆய்வங்கள் அரசிடம்  இல்லாத நிலையில்,  தனியார் ஆய்வங்களையும் துணைக்கு அழைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 45வயது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது, மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  மேலும், 1,075 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாகவும், அவர்கள்  டெல்லி தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று கூறப்படு கிறது.

இந்த நிலையில்,  கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளையும் அரசு தொடர்ந்து பரிசோதிக்கும் என்று தெரிவித்த சுகாதாரத்துறைச் செயலாளர்,  இப்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது 2,000 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும்,  இதுவரை அரசுத் துறையில் 14 ஆய்வகங்களில் 10,655 மாதிரிகளையும், தனியார் துறையில் ஒன்பது மாதிரிகளை பரிசோதித்து உள்ளதாகவும் கூறி உள்ளார்.

தற்போதைய நிலையில், அரசிடம்  சுமார் 24,000 ஆர்.என்.ஏ அடிப்படையிலான பி.சி.ஆர் சோதனைக் கருவிகள் உள்ளன, மேலும்  90,000 கருவிகளைப் விரைவில் பெறுவோம் என்று தெரிவித்தவர்,   சோதனைக் கருவிகள் வரும் வரை காத்திருக்காமல் அனைத்து சோதனைகளை யும் செய்ய நாங்கள் அவற்றைப் பயன்படுத்துகிறோம், “என்று பீலா ராஜேஷ் கூறினார்.

கடுமையான சுவாச நோயால் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 49 பேரில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 16 பேர், தப்லிகி ஜமாஅத் கிளஸ்டரைச் சேர்ந்தவர்கள் என்று கூறியவர், நோயாளிகளுக்கு அவர்களின் ஆபத்தை அடையாளம் காண உதவும் வகையில் ஐவிஆர்எஸ் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி