கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களிடம் சமூக விலகலே முக்கியத்தேவை என உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் முற்றிலுமாக குணமடையும் வரை, 2022-ம் ஆண்டு வரை சமூக விலகல் கடைபிடிப்பது நன்மை தரும் என்று மருத்துவ நிபுணர்களும் ஆய்வாளர்களும்  தெரிவித்து உள்ளனர்.

கடந்த (2019) ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் பரவி உள்ள கொடூர வைரஸ் தாக்கத்துக்கு 20லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,34,560 பேர் உயிர் இழந்துள்ளனர்மானோர், ஏராளமானோர் உயிருக்காகப் போராடி வரும் மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாகி உள்ளது. இந்த மோசமான வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என வலியுறுத்தி இருப்பதுடன், மக்களிடையே சமூக விலகல் முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா குறித்து ஆய்வு செய்து வரும், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், சமூக விலகல் மேலும் 2 ஆண்டுகள் வரை தொடர்வது நல்லது என்று தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழக தொற்று நோய்ப் பிரிவு பேராசிரியர் மார்க்லிப்சிட்ச், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவே பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. ஆனால், இதுமட்டும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தாது என்று தெரிவித்துள்ளவர்,

வைரஸ் பரவல் 2-ம் கட்ட நிலைக்குச் செல்லும்போது அதன் தாக்கம் மேலும் மோசமாகவும், வீரியமாகவும் இருக்கும்… இதனால் தொற்றால் பாதிக்கப்பட்வர்களிடம் இருந்து எளிதாக மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த நோய்க்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் அல்லது மாற்று சிகிச்சை முறை கொண்டு வரப்படவேண்டும். இல்லையேல் உலகம் முழுவதும் 2022-ம் ஆண்டு வரை மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் வாய்ப்பு உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக விலகலே சிறந்த மருந்து என்று கூறிய ஆய்வாளர், கொரோனவை ஒழிக்க நம்மிடையே புதிய சிகிச்சைகள் ஏதும் இதுவரை இல்லை… தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே சமூகவிலகல்தான் இப்போது நமக்குஇருக்கும் ஒரே வழி.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.