வாஷிங்டன்:

சீன விஞ்ஞானிகளின் அஜாக்கிரதையாலேயே, வுகான் பரிசோதனைக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியானது என்று அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியுள்ளது.

சீனாமீது ஏற்கனவே வர்த்தக போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பேரிழப்பை சந்தித்த வருவதால், சீனாமீது மேலும் ஆத்திரம் கொண்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக வல்லரசனா அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இதுவரை 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்றை தடுக்க முடியாமல் டிரம்ப் அரசு திண்டாடி வருகிறது. இதன் காரணமாக கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சீனாமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வீசி வருகிறது. ஏற்கனவே சீனா மீது செம காண்டில் இருக்கும் அமெரிக்கா, கொரோனா தடுப்பு குறித்து சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்தது.

சீனா வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்பியது என்றும், அவர்கள் மூலமே அமெரிக்கா விற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து  விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

இந்த விஷயத்தில்  அமெரிக்காவும் சீனாவும் இந்த விஷயத்தில் ஒருவர் மீது ஒருவர்  குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ செய்தியளார்களை சந்தித்தார். அப்போது சீனா மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்.

கொரோனா பரவல் விஷயத்தில் சீனா அரசு உண்மையை மறைப்பதாகவும், நடந்ததை ஏற்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

சீனாவில் வுகான் மாகாணத்தில் உள்ள பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட வவ்வால்கள் அருகில் உள்ள இறைச்சி மார்கெட்டில் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், வவ்வால்களை மார்கெட்களில் விற்பதில்லை, உணவு விடுதிகளில் சமைப்பது இல்லை  என்பது தெரிய வந்துள்ளது. இதில் சீனா தவறான தகவல்களை தெரிவித்துள்ளது, இது  தொடர்பாக உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடுக்க கொரோனா வைரஸை பரப்பவில்லை என்று சீனா கூறினாலும், வேறு ஒரு காரணம் உள்ளது என்றவர்,  அமெரிக்க விஞ்ஞானிகளைக் காட்டிலும் சீன விஞ்ஞானிகள் வைரஸ் சோதனையில் தலைசிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள மடத்தனமாக சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர்களது அஜாக்கிரதையால்தான் கொரோனா வைரஸ் வெளியே கசிந்துள்ளது.

இவ்வாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா  மறுத்துள்ளது