25 ஆயிரம் தினக்கூலிகள்… பால் வார்த்த சல்மான் கான்..

ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை கொரோனா பாதிப்புக்கு இந்திய பிரஜைகள் , நிதியாக வழங்கி வருகிறார்கள்.

சென்னைக்கும், டெல்லிக்குமாய் அனுப்பப்படும் இந்த பணம், பாதிக்கப்பட்டோரை எப்போதும் எட்டும் என்று தெரியவில்லை.

ஆனால் இது இந்தி நடிகர் சல்மான் கானுக்கு தெரிந்திருக்கிறது. இதனால் நேரடியாக களம் இறங்கி விட்டார்.

மேற்கு இந்திய சினிமா தொழிலாளர் கூட்டமைப்பு என்ற சங்கத்தில் மொத்தம் 5 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களில் ஊரடங்கு காரணமாக வேலை இழந்து பொருளாதார உதவி தேவைப்படும் தினக்கூலிகள்- சுமார் 25 ஆயிரம் பேர்.

’’ அவர்கள் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று உறுதி அளித்துள்ளார் ,சல்மான் கான்.
25 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகளை தனது அறக்கட்டளை நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு , தொழிலாளர் கூட்டமைப்பை கேட்டுக்கொண்டுள்ளார் , கான்.

வங்கி கணக்குகள் கிடைக்கப்பெற்றதும், 25 ஆயிரம் பேருக்கும் சல்மான் கான், பணம் அனுப்பி வைக்க உள்ளார்.