பெர்லின்: கொரோனாவன் தீவிரம் குறையவில்லை என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்து வந்தாலும் அதன் 2வது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் உள்ள மாகாணங்களின் தலைவர்களுடன் அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் உள்ள பொதுமுடக்க நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: தளர்வு எதிரொலியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வருவது பொருளாதாரத்திற்கும் சிறந்த தீர்வாக அமையும். நோய் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் தீவிரம் குறையவில்லை என்றார்.