சீனாவைத் தொடர்ந்து தென்கொரியாயை மிரட்டும் கொரோனா….. பலி எண்ணிக்கை உயர்வு….

சீனாவைத் தொடர்ந்து, தென்கொரியாவை கொரோனா வைரஸ் (கொவைட்-19) மிரட்டி வருகிறது. அங்கு இதுவரை 763 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  உயிரிழப்பும்  உயர்ந்துள்ளது.

சீனாவுன் வுகான் மாநிலத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. சீனாவில், இதுவரை  2,592 பேர் பலியான நிலையில்,   77,150க்கும் அதிகமானோர பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தென்கொரியா, இத்தாலி, ஈரான்  போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் இதுவரை 152 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 3 பேர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானில் 19 பேர்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும், இதுவரை 6 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல தென்காரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 161 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 763 ஆக உயர்ந்துள்ளது. யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 28 நாடுகளில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500க்கும் அதிகமாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.