திருவண்ணாலை :
திருவண்ணாலையில் இன்று மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது.

மிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையின் அனைத்துப் பகுதிகளும் கொரேனா வைரஸ் தொற்றால் சூழப்பட்டு உள்ளது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகஅரசும்,  சென்னை மாநகராட்சியும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.  இருந்தாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.
இந்த நிலையில், தற்போது வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பி வருபவர்களால், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து ஏராளமானோர் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் திரும்பியுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலோனோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலையிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 39 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் 30 பேர் மும்பையில் இருந்து திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், , சென்னையிலிருந்து வந்த 5 பேர்கள்,  செங்கல்பட்டில் இருந்து வந்த 2 பேருக்கும், விழுப்புரத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் திருவண்ணாமலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலையில் 81 பேர் குணமடைந்துள்ள நிலையில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.