கோயம்பேடு மார்க்கெட்டில் பரவும் கொரோனா வைரஸ்… மேலும் ஒருவருக்கு உறுதி…

சென்னை:

மூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், அங்கு 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று அங்குள்ள பூ மார்க்கெட் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை திகழ்ந்து வருகிறது.  அங்கு இதுவரை  570 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 660 தெருக்கள் மூடப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் தேவையைக் கருதி கோயம்பேடு சந்தையை பல கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், மக்கள் ஏராளமாக குவிந்தது காய்கறிகளை வாங்கிச் செல்கன்றனர். அவர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியும் பலர் அதை கண்டுகொள்ளாமல் நடந்து கொள்வதால், அங்குள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவி உள்ளது.

நேற்று கோயம்பேடு சந்தை வியாபாரிகள் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அங்கு பூ வியாபாரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கோயம்பேடு சந்தையை மூடுவது குறித்து தமிழக காவல்துறை ஆணையர் உள்பட சிஎம்டிஏ, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று வணிகர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையின் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இன்னொருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், சந்தை மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..

1 thought on “கோயம்பேடு மார்க்கெட்டில் பரவும் கொரோனா வைரஸ்… மேலும் ஒருவருக்கு உறுதி…

  1. * கொசுவுக்கு பயந்து கோட்டய விட்டு ஓடுன கதையா இருக்குன்னு சொன்னாங்க அது உண்மையிலே னிஜந்தானோ? பாவம் மக்கள் ,. கடவுளே முடியல்ல சாமியோ சீக்கிறமா கருண காட்டுங்க. ( கொரானா பாதிச்சவங்கள இந்த பூமியிலே விட்டுட்டு மற்றவங்கல்லாம் விண்வெளி கூடத்துல settled ஆயிற்றா? எப்டி? அங்க கொரானா வறுமான்னு ஆராய சொல்லுங்க வின்ஞானிகள . இல்லன்னா செவ்வாய் கிரகத்துல settle ஆகலாமான்னு நாஸா கிட்ட கேளுங்க – JOKE- NO TENTION. ) மேலிருந்து வரும் ஆபத்துக்கு பயந்து போய் பல நாடுகள்ள மலைகளை குடைந்தும் , பூமிக்கடியிலும் மனிதர் குடியிறுக்கதக்க வசதிகள் நிறைந்த அரங்குகளை அமைத்திருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்ததே இது உண்மையானால் இது குறித்து உலக தலைவர்கள் வெளியிட வேண்டும். இந்தியாவில் கூட இருக்கலாம் அந்த ரகசியம் பிரதமருக்கு தெரியலாம். இதை குறித்து 2700 ஆண்டுகளுக்கு முன்பாக ஏசாயா என்னும் தேவனுடைய தீர்க்கதரிசி சொன்னதாவது; 19 பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள். 

    ஏசாயா 2:19 மேலும் ஆண்டவரின் இறுதி நியாயத்தீர்ப்பு நாட்களில் அதை எதிர் கொள்ள முடியாமல் இவ்வு லகத்தினர் புகுந்து கொள்ளும் இடங்கள் பற்றியும் ஏசு தம்முடைய சீடனாகிய யொவானுக்கு வெளி ப்படுத்தியதாவது : 15 பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, 

    வெளிப்படுத்தின விசேஷம் 6:15

    ( இது உலகத்திர்க்கான வார்த்தை. ) இவ்வுலகை படைத்த கடவுளின் நியாயத்தீர்ப்பு நாளைக்குறித்து பயமில்லாமலிறுக்க ஒரே வழி மன்னுயிரை மீட்க இன்னுயிரை சிலுவையில் ஈந்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவே. 31 அதற்கு அவர்கள்; கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் .

    அப்போஸ்தலர் 16

Comments are closed.