சென்னை:
கொரோனா தொற்று மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எசசரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் 3வது கட்டத்தை எட்டிவிட்டதா என்ற கேள்விக்கு ஏற்கனவே, சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் உலகெங்கும் சவாலாக உள்ள நோய் அது எந்த நேரத்தில் எப்படி பாதிக்கும் என்று சொல்ல முடியாது. தமிழகத்தை பொருத்தவரை கொரோனா பரவல் இரண்டாவது கட்டத்தில் தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் நிலையில் தான் உள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் கட்டம் என்பது உள்நாட்டு பரவல், அதாவது வெளியில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவுவது. இதேபோல கொரோனா மூன்றாம் கட்டம் என்பது சமூக பரவல், அதாவது உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது என்பது குறிப்பிடத்தக்கது.