ஒரு கிராமமே தனிமைபடுத்தப்பட்டதால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாது என உத்தரவு…

கிருஷ்ணகிரி :

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தில் தொற்று நோய் பரவாமல் இருக்க திடீர் திருப்பமாக கிராமத்தையே தனிமைபடுத்தியுள்ளனர்.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை பெற தொலைபேசி எண்களும் தரப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா தொற்றுநோய் இல்லாத மாவட்டமாக உள்ள நிலையில் பொதுமக்களை முற்றிலுமாக பாதுகாக்கும் பொருட்டு தற்போது ஒரு கிராமத்தையே தனிமைப்படுத்தி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் உள்ளிட்ட எந்த பகுதியிலும் இதுவரை யாருக்கும் கொரோனா அறிகுறி ஏற்படவில்லை. இந்த மாவட்டத்தில், 410 பேரின் ரத்த மாதிரிகள் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வுக்குட்படுத்தியதில் 265 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று தெரியவந்துள்ளது.