லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி 2021ம் ஆண்டு துவக்கத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அந்நாட்டின் துணை தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் ஆலோசகரான ஜோனத்தன் வான் டாம் கூறியதாவது:  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி, அஸ்ட்ராஜெனெகா  தடுப்பூசி கிறிஸ்துமசுக்கு பிறகு விரைவில் தயாரிக்கப்படலாம்.
அனைத்து தடுப்பூசிகளும் 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நோயாளிகளுக்கு வழங்கும் முன்னர் மதிப்பிடப்பட வேண்டும் என்று கூறினார்.
தற்போது இங்கிலாந்தில்  7 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மட்டும்  6 லட்சத்திற்கும் அதிகமானதாக உள்ளது. இதுவரை 43 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.