வாஷிங்டன்: கொரோனா வைரசால் மக்கள் கொல்லப்படுவதை விட, பொருளாதார ரீதியாக மக்களை திவாலாகி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரசால் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. சீனா உள்பட பல நாடுகள் கடுமையான உயிரிழப்புகளை சந்தித்துள்ளன. அதே போல பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் உயிர்கொல்லியான கொரோனாவை விட,  அதன் எதிரொலியாக பொருளாதார வீழ்ச்சியால் உலகில் அவரச நிலையை காட்டுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: கொரோனா வைரஸின் பொருளாதார ஆபத்து பொதுமக்களுக்கு ஏற்படும் சுகாதார அபாயங்களை விட அதிவேகமாக உள்ளது.

வைரஸ், வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது என்றால், வேலைக்கு செல்வதை நிறுத்துவதன் மூலமாகவோ, முதலாளியால் பணிநீக்கம் செய்யப்படுவதன் மூலமாகவோ  பொருளாதாரம் பாதிக்கப்படும்.

கடந்த 2 ஆண்டுகாலமாக நிதிச்சந்தைகளில் காணப்படும் இழப்புகள் டிரில்லியன் கணக்காக இருக்கிறது. அதிபர் டிரம்ப் நிலைமையை கையாள்வதில் தொடர்ந்து தடுமாறினால், அது மீண்டும் தேர்தலுக்கான வாய்ப்புகளை பாதிக்கலாம். குறிப்பாக ஜோ பிடன் கோவிட் -19 ஐ ட்ரம்பிற்கு ஒரு பலவீனம் என்று அடையாளம் என்பதை உணர்ந்திருக்கிறார்.

உலகளவில், கோவிட் -19 இன்று வரை 31 அமெரிக்கர்களை உயிரிழக்க வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் மொத்தம் 4,389 பேரின் உயிரை பறித்து இருக்கிறது.

இதனால் இது பொருளாதார ரீதியாக மில்லியன் கணக்கானவர்களை முடக்கும், குறிப்பாக பங்குச் சந்தை வீழ்ச்சிகள், ரஷ்யாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான ஒரு எண்ணெய் யுத்தம் என்று குறிப்பிட்டுள்ளனர்.