பீஜிங்:

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய ‘கொரோனா’ வைரஸ்  இன்று உலக நாடுகளையும், மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியா உள்பட உலகில் 139 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, சீனாவில  3,177 பலியான நிலையில் அங்கு நோய் பாதிப்பு நீங்கி பலி எண்ணிக்கை குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஆனால் மற்ற நாடுகளில் அது தீவிரம் காட்டி வருகிறது….உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 5,000 ஆக இருந்த நிலையில் இன்று பலி  ண்ணிக்கை 5,436 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்புக்கு நேற்று 1,34,559 ஆக இருந்தது, இன்று  145,634 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே இத்தாலியில் 1,266, ஈரான் 514, ஸ்பெயின் 133 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் 72,529 பேர் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.