மகாராஷ்ட்ரா, தெலுங்கானா மற்றும் குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு

புதுடெல்லி: 
சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், மகாராஷ்டிரா குஜராத் மற்றும் தெலுங்கானாவில் , கொரோனா வைரஸ்  தாக்கத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது வரை 1,42,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தற்போது வரை குஜராத்தில் பதிவான எண்ணிக்கை 28,943. மேலும் தெலங்கானாவில் 10, 337 பேர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 16,000 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.73 லட்சமாக உள்ளது. நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கையும் 418ஆக அதிகரித்துள்ளது.
A doctor wearing a protective gear takes a swab from a woman to test for coronavirus disease (COVID-19), in Dharavi, one of Asia’s largest slums, in Mumbai, India, April 9, 2020. REUTERS/Francis Mascarenhas
மேலும் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 33.39 பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர், மேலும் இறப்பு விகிதமும் ஒரு லட்சம் பேருக்கு 1.06 ஆகவே உள்ளது இது மற்ற நாடுகளை விட மிகவும் குறைவானது என்று சுகாதாரதுறை அமைச்சகம்  குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 1,007 ஆய்வுகூடங்கள் உள்ளன, இதில் 734 அரசு ஆய்வு கூடங்களும், 273 தனியார் ஆய்வுக் கூடங்களும் உள்ளன.
ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் 24-ஆம் தேதி வரை மொத்தமாக இந்தியாவில் 75,60,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன, என்று சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.