இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு மீண்டும் கொரோனா!

திருவனந்தபுரம்:

த்தாலியில் இருந்து துபாய் விமானம் மூலம்  கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.ஏற்கனவே 3 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. இந்த  நிலையில்  இத்தாலியில் இருந்து கேரளம் திரும்பிய 3 பேர் உட்பட பத்தினம்திட்டாவை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் ஏற்கெனவே 3 பேருக்கு கரோனா உள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இத்தாலாயில் இருந்து துபாய் விமானம் மூலம்  கேரளா வந்த 3வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. விமான நிலையத்தில் செய்த பரிசோதனையில் குழந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தையின் பெற்றோருக்கு கொரோனா சோதனை  நடைபெற்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா உறுதிசெய்தார். தொடர்ந்து,   கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் மட்டும் நாளை தொடங்கவிருந்த 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கேரளத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், வாடிக்கையாளர்களின் செல்போன் அழைப்புக்களின் போதும் கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை ஒலிபரப்ப உத்தரவிட்டுள்ளது.