144 விதிக்கப்பட்ட நாக்பூரில் கொரோனா சோதனை தீவிரம்…

நாக்பூர்:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரசால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவிலான கொரோனா தாக்கம் உள்ள நிலையில், அங்குள்ள நாக்பூர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரேனா வைரஸை கட்டுப்படுத்த  மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,  பொதுக்கூட்டம், போராட்டம், கலாச்சார, விளையாட்டு, வர்த்தக கண்காட்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி மாநில சுகாதாரத்துறை, அங்கு முகாமிட்டி கொரோனா சோதனைகளை முடுக்கி விட்டுள்ளது. அங்கு பலருக்கு நோய் தொற்று உள்ள நிலையில், அதை பரிசோதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சோதனை உத்திகள் பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் மாநிலத்தின் ஐந்து பெருநகரங்களில் மகாராஷ்டிரா அரசு பொது போக்குவரத்தில் பயணிக்கும் மக்களின் அடையாள அட்டைகளை சரிபார்க்கும் நிலையில், அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்கள் பயணத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்  என்று அறிவித்துள்ளது.