புதுடெல்லி: நரேந்திர மோடியின் அரசு மீது பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிருப்தியாக உள்ளனர் என்பது அவர்களுடைய கருத்துக்களின் மூலம் தெரியவருகிறது.

இந்தப் பட்டியலில் ஆதி கோத்ரேஜ் மற்றும் ராகுல் பஜாஜ் போன்றோரும் அடக்கம். இவர்கள், மோடி அரசின் சில வர்த்தக கொள்கைகள் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“ஆட்டோ தொழில்துறையானது, குறைந்துவிட்ட தேவைகள் மற்றும் தேவையான தனியார் முதலீடுகள் இல்லாத காரணத்தால் இக்கட்டான சூழலில் சென்று கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார் பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ்.

“நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார் பிரபல தொழிலதிபர் ஆதி கோத்ரேஜ்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நிதியில் மிகப்பெருமளவு நிதியை, பாரதீய ஜதா கட்சியே கடந்த காலங்களில் பெற்று வருகிறது. அந்த நிறுவனங்கள் தங்களுக்கு சார்பான கொள்கையை பாரதீய ஜனதாவிடமிருந்து பெரியளவில் எதிர்பார்க்கின்றன.

எனவே, அவர்கள் நினைக்காதது நடக்காதபோதோ அல்லது எதிர்பார்த்த வேகத்தில் நிகழாதபோதோ அவர்கள் மோடி அரசின் மீது தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.