டில்லி

த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவனங்களுக்கு  விதிக்கப்படும் கார்பரேட் வரி படிப்படியாக குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு  டில்லி செங்கோடையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில், “நாம் நாட்டில் செல்வத்ஹ்டை உருவாக்குவோரைச் சந்தேகத்துடன் பார்க்கக் கூடாது. செல்வம் உருவாக்கப்பட்டால் தான் அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து அளிக்க முடியும், செல்வத்தை உருவாக்குவோர் நாட்டுக்கு அவசியம் தேவைப்படுகிறார்கள். எனவே அவர்களை மதித்து அவர்களுக்கு உதவ வேண்டும்” என தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “வருட வருமானம் ரூ.400 கோடிக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்பரேட் வரி இந்த வருட நிதி நிலை அறிக்கையில் 30% லிருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வருடம் நிதி நிலை அறிக்கையில் ரூ.250 கொடி வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு 25% கார்பரேட் வரி விதிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் பிரதமர் மோடி நாட்டில் செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனச் சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். அதற்கு இணங்க தற்போது ரூ,.400 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும்  25% கார்பரேட் வரி படிப்படியாகக் குறைக்கப்படும்” என அறிவித்துள்ளார்.

நேற்று வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு குறைக்கப்பட உள்ள கால கட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.