கார்பரேஷன் வங்கி கடன் மோசடி….5 இடங்களில் சிபிஐ ரெய்டு

சென்னை:

கார்பரேஷன் வங்கி கடன் மோசடி வழக்கில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கார்பரேஷன் வங்கியில் ரூ.201 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை அமைந்தகரை உள்ளிட்ட 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.எல்.ஓ இண்டஸ்ட்ரீஸ், அரண் ஸ்டீல்ஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் மீது வங்கி கடன் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவன அதிபர்களின் அலுவலகங்கள், வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.