சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் ! தஞ்சையில் பரபரப்பு

--

தஞ்சாவூர்:

ஞ்சாவூர் அருகே உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தஞ்சாவூர் அருகே மகர் நோன்பு சாவடி பகுதியில் பழைய வீடு ஒன்றை வாங்கி வைத்துள்ளார். அந்தவீடு தகுதியற்ற நிலையில் உள்ளதாக கூறி, அதை இடித்து அகற்றும்படி சசிகலாவுக்கு மாநகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கண்டு கொள்ளப்படாத நிலையில்,  தற்போது அந்த வீட்டை இடித்து அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதுதொடர்பான நோட்டீசை தஞ்சாவூர் தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் அந்த வீட்டின் சுவரில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.  இந்த சம்பவ்ம அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.