சென்னை:

மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தனியார் அமைப்பான அட்சய பாத்திரம் அமைப்பின் மூலம் செயல்படுத்தப் படுகிறது. இதற்கான பூமிபூஜை விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததது .  அக்‌ஷய பாத்ரா என்ற தொண்டு நிறுவனம், சென்னை மாநகராட்சியுடன்  இணைந்து அரசு பள்ளிகளில், மாணவ மாணவிகளுக்கு  காலை உணவை வழங்கும்  அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து முதன்கட்டமாக சென்னை திருவான்மி யூரில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை  கடந்த ஆண்டு (2019) பிப்ரவரி 25ந்தேதி அன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனஅமைப்பினர்  அமைக்கப்படும் உணவுக்கூடத்திற்கான  பூமிபூஜை விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஒபிஎஸ் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள்  பங்கேற்றனர்.