சென்னை: தலைநகர் சென்னையில் 200 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா என்று ஆய்வு நடத்துகிறது சென்னை மாநகராட்சி.

இது குறித்து சென்னை மாநகராட்சி சுகாதார துணை ஆணையர் மதுசூதனன் ரெட்டி கூறி இருப்பதாவது: மக்களின் வசிக்கும் வீடுகளுக்கு செல்வதற்காக 10000 தன்னார்வலர்களை நியமிக்க உள்ளோம். அவர்களுடன் சுய உதவிக்குழுவினரும் அடக்கம்.

அவர்கள் வீடுகளுக்கு சென்று அங்கு வசிப்பவர்களிடம் விசாரிப்பார்கள். அவர்களின் பயண விவரங்கள், இருமல், சளி,காய்ச்சல் இருக்கிறதா, உடல்நிலை எப்படி உள்ளது என்பது பற்றி விசாரிப்பர். மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் அவர்களுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்குவர்.

அவர்கள் எந்த பரிசோதனையும் செய்ய மாட்டார்கள். விவரங்களை மட்டுமே சேகரிப்பர். வேறு ஏதேனும் பரிசோதனை வேண்டும் என்று நினைப்பவர்கள் அருகில் உள்ள சுகாதார ஆய்வு நிலையங்களை அணுகலாம் என்று கூறினார்.