1currptin
டில்லி:
ழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசியலில் தொடர நிந்தர தடை விதிக்கலாமா என உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
ஊழல் குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகளை தண்டிப்பது தொடர்பாக பா.ஜ.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநலவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஊழல்கறை படிந்த அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை கொண்டுவந்தால் என்ன? என்ற கேள்வியை மன்றம் மத்திய அரசிடமும், தேர்தல் ஆணை யத்திடமும் கேட்டுள்ளது.
பா.ஜ.க-வைச் சேர்ந்த வழக்கறிஞரான அஸ்வின் குமார் உபாத்தியாயா தொடர்ந்த ஒரு பொதுநல வழக்கில் ஊழல் வழக்கில் சிக்கி குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அரசியலில் ஈடுபட நிரந்தர தடைவிதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், மற்றும் நாரிமன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 35% பேர் கிரிமினல் வழக்குகளுக்கு ஆளானவர்கள். இவர்களில் 25% பெர் மிகக் கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.
இதேபோன்ற குற்றங்களை ஒரு அரசு அதிகாரியோ அல்லது நீதித்துறையை சேர்ந்தவர்களோ செய்தால் சட்டம் அவர்களை கடுமையாக தண்டிக்கிறது. இதே போன்ற தண்டனைகளை அரசியல்வாதிகளுக்கும் கொண்டுவர வேண்டும்.
அதுமட்டுமன்றி வழக்குகளை வருடக்கணக்காக இழுத்தடிக்காமல் ஓராண்டுக்குள் முடித்துவிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றுள்ளது.
இதை விசாரித்த நீதிபதிகள் ,  ஊழல் அரசியல்வாதிகளுக்கு நிரந்தரத் தடை, மற்றும் ஓராண்டுகளுக்குள் வழக்கு முடித்தல் ஆகியவை தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.