ஊழல் தலைவர்கள் கூலிப்படையை விட மோசமானவர்கள் : குஜராத் உயர்நீதிமன்றம்

கமதாபாத்

ழல் செய்யும் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் கூலிப்படையை விட மோசமானவர்கள் என குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத் நகரசபை  எல் ஜி மருத்துவமனை என்னும் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறது.  இந்த மருத்துவமனை யில் பணி புரியும் ஆர் சி ஷா என்னும் மருத்துவர் மீது லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.  அதைத் தொடந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.   தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் முன் ஜாமீன் மனு ஒன்றை அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் அளித்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்டிவாலா, “நம் நாட்டைப் போன்ற முன்னேற்றம் அடையும் நாடுகளில் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் நாட்டுப் பணி ஆற்ற வேண்டும்.   ஆனால் அவர்கள் லஞ்சம் மற்றும் ஊழலில் திளைத்துள்ளனர்.   இவ்வாறு லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் தலைவர்களும் சமுதாயத்துக்கு மிகவும் எதிரானவர்கள்.

ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் கூலிப்படையை விட மோசமானவர்கள்.    இவர்களைப் போன்றவர்களுக்கு முன் ஜாமீன் வழங்குவது தவறு.   என்ன ஊழல் செய்தாலும் தாம் கைது செய்யப்பட மாட்டோம் என்னும் தைரியம் அவர்களுக்கு இதனால் உண்டாகும்.   நீதிமன்றம் அத்தகைய ஒரு சுதந்திரத்தை இவர்களுக்கு தரக் கூடாது.  அதனால் நான் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்கிறேன்” என தீர்ப்பளித்துள்ளார்.