தமிழ்நாட்டில் அனைத்து துறையிலும் லஞ்சம்!:  கமல்

--

சென்னை:

தமிழ்நாட்டில்  அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், அரசியல் விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

“நான் ஓட்டுதான் போடுவேனே தவிர,  அரசு செயல்பாடு பற்றி மார்க் போட மாட்டேன். அப்படி தெரிவித்தால், ரகசியமாக வாக்களிக்க அவசியம் இல்லையே” என்றார் கமல்.

மேலும், “தசாவதாரம் எடுத்தபோது கொண்டாடியவர்களுக்கு விஸ்வரூபம் எடுத்தால் பிடிக்காது. எனது பல படங்களின் வெளியீட்டின்போது பலரும் எதிர்த்தபோது அரசும், மக்களும் வேடிக்கை பார்த்தார்கள்” என்றும் கமல் தெரிவித்தார்.