சூரப்பா மீதான ஊழல் புகார்: அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பான மீதான முறைகேடு புகார்கள் தொடர்பாக,  பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, தமிழகஅரசு, விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.   மூன்று மாதங்களில் இந்த விசாரணையை முடித்து அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் , விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார். ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்திய நிலையில், மேலும் பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளது.  அண்ணா பல்கலைக்கழகம் சார்பிலும் பல்வேறு ஆவணங்களை நீதிபதியிடம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 28ந்தேதி ( திங்கள் கிழமை), உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.