Random image

ஊழல் புகார்: திமுகமீது வழக்கு தொடருவேன்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை:

ன் மீது ஊழல் புகார் கூறியுள்ள திமுக மீது விரைவில் வழக்கு தொடருவேன் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.

உள்ளாட்சித் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கூறி,  ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத் துறை இயக்குநரிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு கொடுத்துள்ளார். அதில், உள்ளாட்சித்துறை ஒப்பந்தங்கள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவின்படிதான் வழங்கப்படுவதாகவும், ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தங்கள் அவரது பினாமி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறி அதன்மீசூது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்பட்டு உள்ளது.

மேலும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எஸ்.பி.வேலு மணி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இந்த நிலையில், திமுகவின் ஊழல் புகார் மனு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  ‘‘எனது உறவினர்கள், நண்பர் கள் பல்வேறு தொழில்களில் ஈடு பட்டுள்ளனர். என்னுடன் இருக்கிறார்கள் என்பதாலேயே, அவர்கள் தொழில் செய்யக் கூடாது என்று சொல்வது சரியா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், என்னுடன் இருப்பவர்கள், உறவினர்கள் ஏதேனும் ஒப்பந்தப் புள்ளிகள் எடுத்திருந்தால், அதில் விதிமுறைகள் மீறப்பட்டி ருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியும் தவறு, அதில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்களும் தவறு. எனவே, இரண்டொரு நாளில் நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன்.”

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.