Random image

ஊழல்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிய வேண்டும்: லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார் மனு

சென்னை:

மிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது  வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று  லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார் மனு கொடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. உள்ளாட்சித் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கூறி,  ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத் துறை இயக்குநரிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  புகார் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில்,  உள்ளாட்சித் துறையின்கீழ் உள்ள சென்னை, கோவை உள் ளிட்ட அனைத்து மாநகராட்சி களிலும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவின்படிதான் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அமைச்சரின் பினாமி நிறுவ னங்கள்தான் அவரது துறைகளிலும்  முழு ஆதிக்கம் செலுத்து கின்றன.

அதுமட்டுமின்றி, கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களையும் பெறுகின்றன. ரூ.86 லட்சம் அளவுக்கு மட்டுமே வணிகம் செய்த நிறுவனம், இவர் உள்ளாட்சித் துறை அமைச்சரான பிறகு, 28 கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் செய்யும் நிறுவனமாக மாறியிருக்கிறது. இன்னொரு நிறுவனம் 5 மடங்குக்குமேல், தனது வணிகத்தை ரூ.150 கோடி வரை அதிகரித்துள்ளது.

ரூ.149 கோடி மதிப்பிலான சென்னை ஸ்மார்ட் சிட்டி டெண்டர், ரூ.100 கோடி மதிப்பிலான 10 மாநகராட்சிகளின் ஸ்மார்ட் சிட்டி டெண்டர் ஆகியவை அமைச்சரின் உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ரூ.942 கோடியை உபரி நிதியாக வைத்தி ருந்த சென்னை மாநகராட்சி, இன் றைக்கு ரூ.2,500 கோடி கடனில் மூழ்கி யிருக்கிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான இந்த ஊழல் புகார் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத் துறை, சட்ட நெறிமுறை களைப் பின்பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  ஊழல் புகாருக்குள்ளான அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி உள்ளார்.

ஏற்கனவே திமுக சார்பில் முதல்வர் எடப்பாடி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் ஊழல் புகார் கொடுக்கப்பட்டு, அதில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததால், தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.