ழல் குற்றச்சாட்டு காரணமாக தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ரா. இவர் ஆட்சியில் இருந்தபோது ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தாய்லாந்து சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவத்ரா. இவரது  ஆட்சியின் போது அறிமுகப் படுத்திய திட்டம் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கிளர்ச்சியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

அதைத்தொடர்ந்து அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து ஷினவத்ரா நாட்டை விட்டு தப்பியோடினார்.  இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.