தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை:

மிழகத்தில் பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடக்கிறது என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது, பல்கலைகழக துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளது என்று ஆளுநர் பன்வாரிலால் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இந்த விவகாரத்தில்  ஆளுநரே ஒப்புதல் அளித்துள்ளது வேடிக்கையாகவும் வேதனை யாகவும் உள்ளது .  ஊழல் குறித்து தகவல் வெளியிட்டுள்ள கவர்னர், நடவடிக்கை எடுக்காதது வேடிக்கையானது.   இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி திமுக தரப்பில் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், தமிழகத்தில்  பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின்,  ஊழல் குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்  என்று தெரிலித்தார்.

தமிழக இடைத்தேர்தல் மழையை காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது,  அதிமுகவுக்கு தோல்வி பயம் இருப்பது தெளிவாக தெரிகிறது என்றவர்,  தலைமை செயலாளர் கிரிஜா அதிமுகவிற்கு கொள்கை பரப்பு செயலாளர் போல் செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.