துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல்: தமிழகஅரசு மீது ஆளுநர் அதிரடி குற்றச்சாட்டு

சென்னை:

மிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் தமிழக அரசு மீது புரோகித் பகீர் குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார்.

தமிழகத்தில்  செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுவதில் கோடிக்கணக்கில் பணம் விளையாடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இது தொடர்பாக பல துணைவேந்தர்கள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட 10 பல்கலைக்கழகங்களுக்கு புதியதுணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழக கவர்னராக பன்வாரிலால் பதவி ஏற்ற பிறகு, துணைவேந்தர்கள் நியமனத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பபட்டது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கவர்னர் பன்வாரிலால், தமிழக பல்கலைக்கழகங்க ளில் துணைவேந்தங்கள் நியமிக்கப்படுவதில், பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது. இது எனது கவனத்திற்கு வந்ததும்,   துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததை கண்டு வருத்தமடைந்து அதை மாற்ற நினைத்தேன் என்று  பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவி வெளிப்படையாகவும், ஒருவரின் தகுதி அடிப்படையிலேயே துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும் என்றும், தகுதியின் அடிப்படையிலேயே தற்போது துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.

ஆளுநரின் இந்த அதிரடி குற்றச்சாட்டு தமிழக ஆட்சியாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.